
well to start with this much awaited movie-it made me speechless.totally a non sense movie..camera work is good but not different ...what wil u do if u got checkmated while playin chess..vishnuvardhan did the same..i don know
whether the villain s interfering or hero and heroine are interfering in the story..u cant decide..
SARVAM-a worst night mare
Author: Unknown / Labels: Moviesதான் வள்ர்த்துவிட்ட விடுதலைப்புலிகளை தானே அழிக்க துடிக்கும் காங்கிரஸ்.அந்தக் கூட்டனியில் கலைஞர். திடிரென ஈழத்தின் மேல் பாசம் கொண்ட அம்மா.
பச்சோந்தியின் வகையராவோ என சந்தேகிக்கும் வகையில் ராமதாஸ் (என்ன சந்தேகம் கட்டயாம் அவர் பச்சோந்திதான்).
இவர்களுக்கு மத்தியில் அரிதாரம் பூசா நடிகராக சீமான். இவர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்றார் போல் மேடையில் ஏறி புதுக்கரடி
விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்தியா நினைத்திருந்தால் எப்போதோ ஈழத்தில் போர் நின்றிருக்கும். அனால் அதைதான் காங்கிரஸ் அரசு விரும்பவில்லையே. அவர்களின் ஒரே பதில் ராஜிவ் காந்தி கொலை. ஒரு நாட்டின் பிரதமர் கொலைசெய்யப் படுவது சாதாரன விஷயமன்று.
ஆனால் ஓர் உயிருக்காக இன்னும் எத்தனை லட்சம் உயிரை காவு கேட்பீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழன் அழிக்கப்படுவான்.
"ஏய் இந்திய அரசே அவனை நீ தமிழனாக பார்க்கவிடினும்
இரத்தமும் சதையும் கொண்ட மனிதனாகவாவது பார்க்க முயற்சி செய்.
ரட்சதர்களின் பசி கூட அடங்கி இருக்குமே.
இன்னும் உன் பசி அடங்கவில்லையா?"
இலங்கை அரசோ , இந்தியா அரசோ மனசு வைத்தால் ஒழிய ஈழம் மலராது..
ஆனால் சுயநல எண்ணம் கொண்ட இலங்கை அரசு போரை நிறுத்தாது.
அடுத்து, உலக சர்வாதிகம் செய்யும் அமெரிக்கா, அவ்வப்போது நான் இருக்கிறேன் என காட்டிக்கொள்ளா ஈழப் பிரச்சனையில் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கிறது.இலங்கையில், எண்ணை வளமோ கணிம வளமோ இல்லையே..இருந்திருந்தால் அமெரிக்க தலையிட்டிருக்கும்.
ஐநா சபை-உலக சர்வாதிகாரிகள் தங்கள் நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் ஓர் மாய அரங்கம்..
இவர்களுக்கு மத்தியில், "தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பதர்கினங்க திரைப்படத்தை இயக்கியவர்க்ள் இன்று மேடையில், ஈழம் என்ற ஒரே ஒரு கதை கருவைக்கொண்டு, புது மேடைக்கதைகளை இயக்கிக்கொண்டிருகிரார்கள். தமிழ்நாட்டில் தமிழனை ஆதரித்தால் மட்டுமே குதிரை ஓட்ட முடியும் என்று தெரிந்து கொண்ட அரசியல்வாதிகளின் புது வகை ஏமாற்றுவேலையே இந்த ஈழம்..இவர்கள் யாருக்கும் இலங்கை தமிழர்கள் மேல் உண்மையான அன்போ பரிவோ கிடையாது.
ஒவ்வொருவனும் தங்கள் கட்சியின் ஒட்டு வங்கியை மனதில் வைத்தே காய் நகர்திக்கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு வடம் பிடிப்பது இந்த சினிமா இயக்குனர்கள்.
சீமான் சில தினங்களுக்கு முன், பக்கம் பக்கமாக இலங்கை தமிழர்களைப்பற்றி பேசிவிட்டு, இறுதியில்- 'ஓட்டு போடுங்கள் மாம்பழதிற்க்கு' என்று கொக்கரிக்கிறார்.தான் சார்ந்த கட்சிக்காக பேசுவது அவரவர் விருப்பம்.இதில் ஈழத்தமிழர்களை ஏன் பலிகடா ஆக்குகின்றீர்கள்?
ராஜபக்ஷே இலங்கை அரசில், அமைச்சர் பதவிதந்தால் ராமதாஸ் அங்கு ஓடிவிடுவார். பின் சிங்களர்களை ஆதரிக்கதொடங்கிவிடுவார் போலும்..பின் அவரின் எடுபிடிகளும் சிங்கள ஆதரவு பிரசாரம் நடத்த தொடங்கிவிடுவர்.
இதில் யார் பைத்தியக்காரர்கள். ..நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என நம்பிக்கொண்டிருக்கும் நாம்.
தனக்கென தனியொரு அரசியல் கொள்கை இல்லா இந்தியாவினால், சிலாயிரம் மக்களுக்காக வகுக்கப்பட்ட அரசியல் சட்டத்தை இன்னும் பலகோடி மக்களுக்கு பயன் படுதிக்கொண்டிருக்கும் இந்தியாவினால், குடும்ப அரசியல் நடத்தும் சுயநல அரசியல்வாதிகளைக் கொண்ட இந்தியாவினால், இவர்களை ஆதரிக்கும் நம்மைப்போல் பைத்தியக்காரர்களைக் கொண்ட இந்தியாவினால், தனி ஈழத்தைப்பற்றி பேச மட்டுமே இயலும்..
"நாம் பேசிக்கொண்டே இருப்போம்
ஈழத் தமிழர்கள் அழியும் வரை;
அரசியல்வாதிகளை நம்பிகொண்டேயிருப்போம்
தமிழ்நாடும் அழிந்துபோகும் வரை"
தமிழக கபட வேஷ அரசியல் வாதிகளே..மகாகவி பாரதியின் பாடல் ஒன்றை உங்களுக்காக அற்பணிக்கின்றேன்..
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திரமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே அவர் வாய் சொல்லில் வீரரடி"
இவண்
அரவிந்தன்